#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கும் பிரபல முன்னணி இளம்நடிகை! அதுவும் தொகுப்பாளராக....வெளியான தகவலால் செம குஷியில் ரசிகர்கள்!
பிக்பாஸ், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பெருமளவில் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி. இதற்கென ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த நிகழ்ச்சி முதலில் இந்தியில் தொடங்கப்பட்டு இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது. இவ்வாறு பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்துவந்த இந்த நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மற்றும் தெலுங்கிலும், அதனைத்தொடர்ந்து மலையாளத்திலும் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி, இதுவரை 45 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அவர் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்ற நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார இறுதி நாட்களில் நடிகை சமந்தா தொகுத்து வழங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் நாகர்ஜுனா வெளிநாடு சென்றதால், நிகழ்ச்சிக்கு வரமுடியாத நிலையில் சில வாரங்கள் நடிகை ரம்யா கிருஷ்ணா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. எனவே ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.