மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. பிக்பாஸ் சீசன் 6ஐ தொகுத்து வழங்கபோவது இந்த இளம் நடிகையா? செம இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழில் இதுவரை பிக்பாஸ் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதனை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
மேலும் பிக்பாஸ் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் ஒளிபரப்பானது. அதில் பாலாஜி முருகதாஸ் டைட்டிலை வென்றார். மேலும் தெலுங்கில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வந்தார்.
இதன் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் விரைவில் பிக்பாஸ் 6வது சீசன் துவங்கவுள்ளது. இந்த நிலையில் தொடர் படப்பிடிப்பு இருப்பதன் காரணமாக நாகார்ஜுனாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து நடிகை சமந்தா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.