மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2022-2023 எனக்கு சவாலான காலமாக இருக்கும்.! அதற்காக தான் இப்படி ஒரு ஒர்க்கவுட்.! திகைக்கும் சக நடிகைகள்.! வைரல் வீடியோ
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் காதலித்து திருமணம் செய்த கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து விட்டார். சமீபத்தில் திரைக்கு வந்த புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடிய குத்தாட்டம் வேற லெவல் ஹிட் ஆனது. அவரது கைவசம் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் போன்ற படங்கள் உள்ளன.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோ சூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார். இந்நிலையில் அண்மையில் அவர் ஜிம்மில் வொர்கவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அவர், அந்த வீடியோவில், ஜிம்மில் பயிற்சியாளரின் குறிப்புகளை கவனமாக கேட்டு ஆண்களுக்கு நிகராக பளுதூக்குகிறார். மேலும் அந்த வீடியோவில் 2022-23 எனக்கு உடல் ரீதியாக மிகவும் கடினமான மற்றும் சவாலான காலமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட வீடியோவுக்கு நடிகை காஜல்அகர்வால் உள்பட 10 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.