#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சமந்தா கூறியதை கேட்டு பயங்கர அதிர்ச்சியடைந்த அவரது கணவர்! அப்படி என்னதான் கூறியுள்ளார் தெரியுமா?
தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து
நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. மேலும் இவர் தனது நடிப்பால் எப்போதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்.
இவர் கடந்த வருடம் தான் காதலித்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.
விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரஉள்ளது.இந்நிலையில் அதுகுறித்து சமந்தா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்பொழுது அவர் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்க ஏற்கனவே இரு நடிகைகள் மறுப்பு தெரிவித்த நிலையில், நான் முதலில் மிகவும் தயங்கி பிறகு துணிந்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தேன்.
அதிலும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் எனது கதாபாத்திரம் குறித்து எனது கணவர் நாகசைதன்யாவிடம் கூறிய போது அவள் என்னை மிகவும் அதிர்ச்சியுடன் பார்த்தார். இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் திருப்தியாக வந்துள்ளது. அதன் ட்ரைலருக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
விஜய்சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் பல ஆச்சரியமான விஷயங்கள் ரசிகர்களுக்கு இந்த படத்தில் காத்திருக்கிறது என சமந்தா கூறியுள்ளார்.