மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த இடத்தில டாட்டூ குத்தியிருக்கும் சமந்தா! அதுவும் என்னனு பார்த்தீர்களா!
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. மேலும் இவர் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாத சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் திருமணமான பிறகும் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் கணவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் சமந்தா சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் அணிந்திருந்த ஆடையுடன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் அவரது வலது இடுப்பு பகுதியில் இருக்கும் டாட்டூ தெரிந்தது.
அதனை கண்டு ரசிகர்கள் அது என்ன டாட்டூ என ஆர்வத்தில் இருந்த நிலையில் அது அவருடைய கணவர் நாக சைதன்யாவில் செல்லப் பெயரான சாய் (chai ) என்பது தெரியவந்துள்ளது.