#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனது மாமனாருக்கு செம ஹேப்பியாக நன்றி கூறிய நடிகை சமந்தா! இதுதான் காரணமா? உருக்கமாக அவரே வெளியிட்ட பதிவு!
பிக்பாஸ், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பெருமளவில் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி. இதற்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சி தெலுங்கில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமானது. இந்த நிலையில் அதன் நான்காவது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்ற நிலையில், கடந்த வாரம் மாஸ் என்ட்ரி கொடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை சமந்தா தொகுத்து வழங்கினார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து இதுகுறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் சமந்தா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இது ஒரு மறக்க முடியாத அனுபவம். நான் ஒரு தொகுப்பாளராக பிக்பாஸ் மேடையில் இருப்பேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை. இது எனது மாமா எனக்கு கொடுத்த பொறுப்பு. இதில் எனது பயத்தை வெல்லும் தைரியத்தை நான் கண்டுபிடித்தேன்.
எனக்கு இதற்கு முன்பு தொகுப்பாளராக இருந்த அனுபவம் கிடையாது. நான் இதற்கு முன்பு பிக்பாஸ் எபிசோடுகளை பார்த்ததில்லை. எனது பயத்தை மீறி என்னை செயல்பட வைத்ததற்கும், என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை கொடுத்ததற்கும் எனது மாமாவிற்கு நன்றி என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.