மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே என்ன இப்படி இருக்காரே... நீண்ட நாட்களுக்கு பிறகு பொது இடத்திற்கு வந்த நடிகை சமந்தா...
நடிகை சமந்தா நீண்ட நாட்களுக்கு பிறகு பொது இடத்திற்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் தெலுங்கில் பிரபல நடிகரான நாக சைத்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் சமந்தா படங்களில் கவனத்தை செலுத்தி வந்தார். சமீபத்தில் மயோசிட்டிஸ் என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார் சமந்தா.
அதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ரசிகர்கள் சமந்தா விரைவில் குணமடைய பிராத்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நீண்ட காலம் வெளியே வராமல் இருந்த சமந்தா தற்போது மும்பை விமான நிலையத்தில் மிகவும் சோர்வுடன் நடந்து வந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அட சமந்தா என்ன இப்படி எலும்பும், தோலுமாக மானிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.