பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இந்த விக்ரம் பட நடிகையை நியாபகமிருக்குதா.? இப்போ எப்படி இருக்கிறாங்க தெரியுமா.!?
தமிழில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் அனிதா ஹாசனந்தினி. இவர் இந்தியில் முதன் முதலில் 'தால்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன.
இப்படத்திற்கு பின்பு தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். தமிழில் முதன் முதலில் மனோஜ் பாரதிராஜா நடிப்பில் வெளியான 'வருஷமெல்லாம் வசந்தம்' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இப்படத்தில் இடம்பெற்ற "எங்கே அந்த வெண்ணிலா" பாடல் மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் மனதில் இன்று வரை இடம்பிடித்துள்ளது. இவ்வாறு அவர் நடித்த முதல் படத்திலேயே மக்களுக்கு பிடித்தமான நடிகையாக மாறிப் போனார் அனிதா.
இப்படத்திற்குப் பின்பு விக்ரம் கதாநாயகனாக நடித்த 'சாமுராய்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் அனிதாவின் நடிப்பு பாராட்டை பெற்றது. மேலும் ஆகாய சூரியனே என்ற பாடல் ரசிகர்களுக்கு பிடித்தமான பாடலாக இன்று வரை இருந்து வருகிறது.
இது போன்ற நிலையில் 'சாமுராய் படத்தில் நடித்த அனிதா ஹாசனந்தினி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் இணையத்தில் இவரது புகைப்படத்தை பதிவிட்டு கமெண்ட் செய்து வந்தனர். அவர் தற்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார் என்று தெரியவந்துள்ளது. மேலும் அவரது தற்போதைய புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.