மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹீரோவான சாண்டி மாஸ்டர்! ஃபர்ஸ்ட் லுக் , பட டைட்டிலே சும்மா வேற லெவல்ல இருக்கே! மிரண்டு போன ரசிகர்கள்!
பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக பணியாற்றி தனது திறமையால் ஏராளமான ரசிகர்களை பெற்று பெருமளவில் பிரபலமானவர் சாண்டி. அதனைத் தொடர்ந்து அவருக்கு சினிமாக்களிலும் நடன இயக்குநராக பணியாற்றும் வாய்ப்புகள் கிடைத்த நிலையில் அவர் பல திரைப்படங்களுக்கும் குறிப்பாக ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தில் பணியாற்றும் மாபெரும் வாய்ப்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து சாண்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு அவர் பாய்ஸ் குரூப் என்ற பெயரில் சக போட்டியாளர்களுடன் சேர்ந்து அடித்த அரட்டைகள் மற்றும் சேட்டைகள் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டது. அதன்மூலம் சாண்டி மாஸ்டர் மேலும் பிரபலமானார்.
Happy to share the Title & First Look of '3:33' Movie.
— VijaySethupathi (@VijaySethuOffl) January 3, 2021
Congrats @iamSandy_Off ☺️#MoonuMuppathiMoonu
Director @NAMBIKAICHANDRU
Produced by @Bamboo_Trees @ProducerJeevi @sathishmanohara @rameemusic @raymondcrasta @Shruthiselvam_ @reshupasupuleti @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/43m4attTDD
அதனைத் தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த அவர் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். சாண்டி மாஸ்டர் நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் 3:33 என்ற வித்தியாசமான திகில் படத்தில் நடித்துள்ளார். இதன் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி போன்றோர் வெளியிட்டுள்ளனர். இது வைரலான நிலையில் பலரும் ஹீரோ சாண்டி மாஸ்டருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.