மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகன் பிறந்த சில நாட்களிலேயே, சஞ்சீவிற்கு அடித்த அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா! செம ஹேப்பியில் ஆலியா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜாராணி. இதில் ஹீரோவாக கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சஞ்சீவ். மேலும் செம்பா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக ஆலியா மானசா நடித்தார். இந்த நிலையில் தொடரில் கணவன், மனைவியாக நடித்த இருவரும் நிஜத்திலும் காதலித்து சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு ஐலா என்ற அழகிய மகள் உள்ளார். இந்த நிலையில் ஆலியாவிற்கு சில தினங்களுக்கு முன்பு இரண்டாவதாக ஆர்ஷ் என்ற ஆண்குழந்தை பிறந்துள்ளது. சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடுத்தர குடும்ப பெண் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் அண்மையில் சன் குடும்ப விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. அதில் சஞ்சீவ்வுக்கு “நட்சத்திர நாயகன்” என்ற விருது கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆலியா தனது இன்ஸ்டாகிராமில், சஞ்சீவ் விருதுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, தன் கணவரை நினைத்து தானும், குழந்தைகளும் மகிழ்ச்சியடைவதாகவும், பெருமைப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார். அது வைரலான நிலையில் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.