#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவ்! செம ஹேப்பியாக மகள், குடும்பத்தினர் கொடுத்த சர்ப்ரைஸ்! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் போட்டியாளராக களமிறங்கியவர் நடிகர் சஞ்சீவ்.
தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களிலும் சிறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சஞ்சீவ் ஒவ்வொரு டாஸ்க்கையும் மிகவும் சிறப்பாக விளையாடி வந்தார்.
மேலும் யாருடனும் கூட்டணி சேராமல், யார் எந்த தவறு செய்தாலும் தைரியமாக எடுத்துக் கூறி விளையாடி வந்த சஞ்சீவ்க்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் குறைந்த வாக்குகளை பெற்று அவர் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவரை அவரது மகள் மற்றும் குடும்பத்தினர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். இந்த வீடியோவை சஞ்சீவ் மனைவி பிரீத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.