96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிக்பாஸ் செல்வதற்காக, சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் வாய்ப்பை தவறவிட்ட சஞ்சீவ்! அதில் இப்போ நடிப்பது யார் தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் போட்டியாளராக களமிறங்கி டாஸ்க்குகள் அனைத்தையும் சிறப்பாக விளையாடிவர் சஞ்சீவ். அவர் கடந்த சில வாரங்களுக்கு முன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் தமிழ் சினிமாவில் பல படங்களில் முக்கிய குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும் சன் டிவியில் மெட்டி ஒலி தொடரில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான அவர் பின்னர் திருமதி செல்வம் தொடரில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் சில தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சஞ்சீவ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக சன் டிவி சீரியல் வாய்ப்பை தவற விட்டுள்ளாராம். அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் வானத்தைப்போல தொடரில் அண்ணன் சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வந்த தமன்குமார் திடீரென்று தொடரிலிருந்து விலகிய நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் சஞ்சீவ்க்கு வந்ததாம். ஆனால் பிக்பாஸ் செல்வதற்காக அந்த வாய்ப்பை அவர் நிராகரித்த நிலையில் அதில் தற்போது நடிகர் ஸ்ரீகுமார் நடித்து வருகிறாராம்.