96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
என்னது.. நடிகர் சஞ்சீவ்வின் அக்கா கொடிய நோயால் உயிரிழந்த இந்த பிரபல நடிகையா! யார்னு பார்த்தீர்களா?
தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் சஞ்சீவ். அதனைத் தொடர்ந்து அவர் திருமதி செல்வம் தொடரில் ஹீரோவாக நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். பின்னர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் மூச்சு விடாமல் அழகிய தமிழில் தொகுத்து வழங்கி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். சஞ்சீவ்வின் அக்கா 90ஸ் காலகட்டங்களில் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான சிந்துவாம். அவர் ராம்கி மற்றும் அருண்பாண்டியன் நடித்த இணைந்த கைகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த சிந்து சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவருக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் அவர் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மக்களுக்காக நிதி திரட்டி பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார். அப்பொழுது அதிகம் நடந்த நிலையில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் 33 வயது நிறைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து சிந்துவின் 9 வயது மகளை தாய்மாமனான சஞ்சீவ் தந்தை ஸ்தானத்தில் வளர்த்து திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த தகவல் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.