96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மறைந்த தன் அக்காவின் மகளுக்கு, நடிகர் சஞ்சீவ் யாரை திருமணம் செய்து வைத்துள்ளார் தெரியுமா? அவரும் பெரும் பிரபலம்தான்!!
தமிழில் பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான அவர் வெள்ளித் திரையிலும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சஞ்சீவ் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவர் அண்மையில் டாஸ்க் ஒன்றில் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள் குறித்து பகிர்ந்துள்ளார். அப்பொழுது அவர் தனது அக்காவை குறித்து கூறியிருந்தார். அதாவது நடிகர் சஞ்சீவ்வின் அக்கா சிந்து. ராம்கி மற்றும் அருண்பாண்டியன் நடித்த இணைந்த கைகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்து மக்களிடையே நன்கு பிரபலமாக இருந்தார்.
நடிகை சிந்துவிற்கு ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சினை இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற்றும் பலனின்றி அவர் 33 வயதில் உயிரிழந்தார்.
திருமணமாகி விவாகரத்து பெற்ற சிந்துவிற்கு ஸ்ரேயா என்ற மகள் இருந்தார். சிந்து உயிரிழக்கும் போது அவருக்கு 9 வயது. அதனைத் தொடர்ந்து சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி ப்ரீத்தியே பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து அவரை வளர்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
சஞ்சீவின் அக்கா மகள் ஸ்ரேயாவை திருமணம் செய்து கொண்டவர் அஸ்வின் ராம். அவர் வேறு யாருமில்லை. ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள அன்பறிவு திரைப்படத்தின் இயக்குனர் ஆவார். அவர் கடந்த வாரம் பட ப்ரோமோஷனுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தபோது இதுகுறித்து சஞ்சீவ் மிகவும் பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.