திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"திருமண உறவுக்குள் நாங்கள் அடைய விரும்பவில்லை" - மனம் திறந்த நடிகை சுருதிஹாசனின் காதலர்.!
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த சுருதிஹாசன், திரைப்படங்களில் தொடர்ந்து கிடைத்த வரவேற்பைதொடர்ந்து ஹிந்தியில் சில படங்களில் நடித்தார்.
இதன்பின் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நடிகை, சமீபத்தில் வெளியான சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார். மும்பையில் தற்போது தனது காதலர் சாந்தனுவுடன் இவர் ஒன்றாக வசித்து வருகிறார்.
இருவரும் அவ்வப்போது சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் சுருதிஹாசனின் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியாகுவது வழக்கம். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் வெளியாகி பின்னர் அவை சுருதிஹாசனால் மறுக்கப்பட்டது.
இந்நிலையில், "திருமணம் என்ற உறவுக்குள் நாங்கள் இல்லை. எங்களுக்கு அதன் மீது நம்பிக்கையும் இல்லை. நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். திருமணம் என்ற குறுகிய வட்டத்திற்குள் நாங்கள் அடைய விரும்பவில்லை. நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்" என்று சந்தனு பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.