#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பார்ப்பதற்கு அப்படியே நடிகர் அருண் விஜய் போலவே தோற்றம் அளிக்கும் சந்தானம்! வைரலாகும் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் தனது அசத்தலான காமெடி நடிப்பால் தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். அதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளுசபா என்ற நிகழ்ச்சியில் நடித்துவந்தார்.
அதுமட்டுமின்றி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒருசில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் நடிகர் சந்தானம். பின்னர் நடிகை ராதிகா இயக்கிய அண்ணாமலை என்ற தொடரிலும் நடித்துள்ளார் நடிகர் சந்தானம்.
இப்படி பல போராட்டங்களுக்கு பிறகு வெள்ளித்திரையில் காலடி பதித்த சந்தானம் ஒரு மிக சிறந்த காமெடி நடிகராக வலம் வந்தார். அதன் பிறகு சமீப காலமாக ஹுரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அதற்காக பல பயிற்சிகளை மேற்கொண்டு வரும் சந்தானம் உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் புகழ் ஜாங்கிரி மதுமிதாவுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பார்ப்பதற்கு நடிகர் அருண் விஜய் போலவே இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.