மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! ஹீரோவாக கெத்து காட்டும் நடிகர் சந்தானத்திற்கு அடித்த அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா!! செம ஹேப்பியில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி, தனது திறமையால் முன்னேறி பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் நடிகர் சந்தானம். அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவரது கைவசம் தற்போது
சர்வர் சுந்தரம், பாரிஸ் ஜெயராஜ், சபாபதி என பல படங்கள் உள்ளன.
இந்நிலையில் சந்தானம் அடுத்ததாக தெலுங்கில் ஹிட்டான ரீமேக் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன், ஸ்ருதி ஷர்மா, ஸ்ரீதா ராஜகோபாலன், ராம்தத், விஸ்வநாத் உள்ளிட்ட பல புதுமுகங்களது நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா'. இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த தமிழ் ரீமேக் படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் சந்தானம் உறுதி செய்யப்பட்டுள்ளார். வஞ்சகர் உலகம் படத்தின் இயக்குநரான மனோஜ் பீடா இப்படத்தை இயக்க உள்ளார். மேலும் இதில் ரியா சுமன் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்படம் தொடர்பான பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.