திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியான கூல் சுரேஷுக்கு மாலை போட்டு கவுரவப்படுத்திய சந்தானம்!"
2001ம் ஆண்டு பிரஷாந்த் நடித்த "சாக்லேட்" திரைப்படம் மூலம் அறிமுகமானார் கூல் சுரேஷ். இதையடுத்து காக்க காக்க, தேவதையைக் கண்டேன், அலை, ஆயுத எழுத்து, எம். குமரன் ச/ஆ மஹாலட்சுமி, பச்சைக்கிளி முத்துச்சரம், குசேலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் சில படங்களில் வில்லனின் அடியாளாகவும், சில படங்களில் காமெடி துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். மேலும் உறவுகள், அது இது எது, தாயா தாரமா, தில்லு முல்லு உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் கூல் சுரேஷ். தற்போது மொத்தமுள்ள 100 நாட்களில் 75 நாட்களைக் கடந்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.
இன்னும் 25 நாட்களே மீதமுள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இதையடுத்து வெளியே வந்த கூல் சுரேஷ் நடிகர் சந்தானத்தை இன்று நேரில் சந்தித்துள்ளார். சந்தானம் இவருக்கு மாலை போட்டு பாராட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.