திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"தங்கலான் அப்டேட் கொடுங்க ப்ளீஸ்" என்று பா ரஞ்சித்திடம் கேட்ட இசையமைப்பாளர்.. வைரலாகும் பதிவு.!
2012ம் ஆண்டு வெளியான "அட்டக்கத்தி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும் அறிமுகமானவர்கள் பா. ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன். தொடர்ந்து இருவரும் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.
அட்டகத்தி படத்தில் இடம்பெற்ற "ஆடி போனா ஆவணி" பாடலும், "நடுக்கடலுல கப்பல இறங்கித் தள்ள முடியுமா" பாடலும் இருவரையும் முதல் படத்திலேயே மிகவும் பிரபலமாக்கியது. 10ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த இருவருக்கும் இடையே திடீரென விரிசல் ஏற்பட்டது.
"எஞ்சாய் எஞ்சாமி பாடலை பாடிய தெருக்குரல் அறிவுக்கு சந்தோஷ் நாராயணனும், அவரது மகள் தீயும் துரோகம் செய்ததாக சர்ச்சை வெடித்ததையடுத்து ரஞ்சித் தனது "நட்சத்திரம் நகர்கிறது" படத்தில் தென்மா என்ற இசையமைப்பாளரை அறிமுகம் செய்தார்.
இசைக்கச்சேரி நடத்தவுள்ள நிலையில் ரஞ்சித் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த சந்தோஷ் நாராயணன், "தேங்க் யூ மாமே! நம்ம பட பாடல்கள் தான் கச்சேரியில் கலக்கப் போகுது" என்றும், "தங்கலான் அப்டேட் ப்ளீஸ்" என்றும் ஒரு ரசிகரைப் போல் கேட்டிருப்பது அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது.