மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சன் டிவியில் இன்று ஒளிபரப்பாகும் சர்கார்!! இந்த சாதனையை முறியடிக்குமா??
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் சர்க்கார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது.
சர்க்கார் படம் ஆளும் கட்சியை மிகவும் விமர்சிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. தமிழக அரசியல் பிரமுகர்கள் குறிப்பாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிராக போர் கொடி தூக்கினர்.
மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை தூக்கவிட்டால் படம் தடைசெய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். மேலும் சர்க்கார் படத்திற்கு எதிராக அங்கங்கே போராட்டங்கள் வெடித்தன.
TRP போட்டியின் காரணமாக ஒவொரு தொலைக்காட்சி நிறுவனங்களும் நாளுக்கு நாள் புது புது நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. அதுவும் பண்டிகை நாட்கள் என்றால் அணைத்து தொலைக்காட்சிகளும் ஏதாவது ஒரு மெகா ஹிட் ஆன படங்களையே ஒளிபரப்பு செய்கின்றனர்.
இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று மாலை 6:30 மணிக்கு சர்க்கார் திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது, இதுவரை பிச்சைக்காரன் படம் தான் தமிழ் சினிமாவில் அதிக TRP வைத்த படம்.
பிச்சைக்காரன் படமும் சன் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பானது என்பது குருப்பிடத்தக்கது. இதை சர்கார் படம் முறியடிக்குமா? என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.