மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. தல அஜித் மேல இப்படியொரு பாசமா! சார்பட்டா பரம்பரை வில்லன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! குவியும் வாழ்த்துக்கள்!!
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. குத்துச்சண்டை விளையாட்டை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரம் முக்கியமான ஒன்றாக அமைந்தது. வேம்புலி கதாபாத்திரத்தில் பாக்ஸிங் வீரராக நடித்து அனைவரையும் மிரள வைத்தவர் ஜான் கொக்கன். இவரது நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது.
ஜான் கொக்கன் இதற்கு முன்பு அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம், கேஜிஎப் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தனக்கு ஊக்கமளித்து முன்னோடியாக இருந்தது அஜித் தான் என்று நன்றி கூறி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நன்றி தல அஜித் சார். என்னை நானே நம்புவதற்கு நீங்கள் எப்பொழுதும் என்னை உற்சாகப்படுத்தினீர்கள். ஊக்குவித்தீர்கள்.
வீரம் படத்தின் ஷூட்டிங் நாட்களில் உங்களுடன் செலவிட்ட நேரங்கள் எனக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுத்தந்தது. இந்த வேம்புலி கதாபாத்திரத்தை நான் உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன். லவ் யு சார் என தெரிவித்துள்ளார்.