மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சசிகுமாரின் காரி.. ரிலீஸ் எப்போ தெரியுமா?? படக்குழு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!
தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சசிகுமார். நடிகர் மட்டுமின்றி இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் அவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். இந்த நிலையில் தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காரி.
இப்படத்தில் ஹீரோயினாக பார்வதி அருள் நடித்துள்ளார். காரி படத்தை ஹேமந்த் இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். மேலும் இதில் பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி, ஆடுகளம் நரேன், ரெடின் கிங்க்ஸ்லே, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் காரி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது காரி படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.