ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சென்னை ஈ சீ ஆரில் உருவாகும் மிகப்பெரிய கிராமம்.. எதற்காகத் தெரியுமா.?
2012ம் ஆண்டு "கழுகு" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சத்ய சிவா. தொடர்ந்து இவர் சிவப்பு, சவாலே சமாளி, கழுகு 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை இயக்கியுள்ளார்.
விஜயகணபதி பிக்சர்ஸ் சார்பில் பாண்டியன் பரசுராம் தயாரிக்கும் படத்தில் சசிகுமார் கதாநாயகனாகவும், ஜெய்பீம் படத்தில் நடித்த லிஜோ மோள் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் சுதேவ் நாயர், போஸ் வெங்கட், சரவணன், மாளவிகா உட்பட பலர் நடிக்கின்றனர்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் சத்யசிவா கூறினார், " 1995 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தை பற்றி ஒரு படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஈ சீ ஆர் சாலையில் ஒரு பெரிய கிராமத்தை செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். இது ஒரு திரில்லர் டிராமா வகை படமாகும். படத்தின் தலைப்பு, டீசர் அனைத்தும் விரைவில் வெளியாகும். பெரும்பான்மை படப்பிடிப்பு முடிந்துவிட்டது" என்று சத்யசிவா கூறினார்.