மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை கண்டிக்கிறேன்" அமீருக்கு சப்போர்ட் செய்யும் சசிகுமார்.!
இயக்குனர்கள் பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சசிகுமார். அதன் பின்னர் 2008ம் ஆண்டு "சுப்பிரமணியபுரம்" படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படத்திற்காக பிலிம்பேர் விருது, விஜய் விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில் 2007ம் ஆண்டு வெளியான அமீரின் "பருத்திவீரன்" படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா அமீர் மீது சில குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். அதற்கு இயக்குனர் அமீரும் விளக்கமளித்து நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அமீரின் நண்பரான சசிகுமார் இதுகுறித்து கருத்து கூறியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள சசிகுமார், "அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பருத்திவீரன் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பிற்கான முழுத்தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன்.
எங்கள் பணத்தை எங்களுக்கு செட்டில் செய்யாமலேயே தான் படத்தை அப்போது ரிலீஸ் செய்தனர். அண்ணன் அமீர் கூறுவது முற்றிலும் உண்மை" என்று நடிகரும் இயக்குனருமான சசிகுமார் அமீருக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார்.