"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த பிரபல நடிகர்.! யார் அவர் தெரியுமா?
தமிழ் சினிமாவில் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இதுவரை இவர் 160க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் திருவிழா கோலம் போல கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தர்பார் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.அதனை தொடர்ந்து தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி படத்தில் வில்லனாக சுமன் என்பவர் நடித்திருந்தார். ஆனால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் தான் நடிக்க இருந்தாராம். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் தான் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.