மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படியும் இருப்பாங்களா?.. நடிகையுடன் ஒரே ஹோட்டலில் தங்க மறுத்தாரா நடிகர் சத்யராஜ்?..! இதுதான் காரணமாம்.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சத்யராஜ். இவர் தகிடு தகிடு என்ற வசனத்தின் மூலம் மக்களால் அறியப்பட்டார். முதலில் வில்லனாக அறிமுகமாகி நடித்த இவர், வால்டர் வெற்றிவேல் என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
சின்னப்பதாஸ், அமைதிப்படை, சின்னத்தம்பி பெரியதம்பி போன்ற பல படங்களிலும் நடித்து மக்களை கவர்ந்தார். நடிகர் சிவாஜிக்கு பிறகு எந்த கதாபாத்திரமானாலும் பொருந்துவது சத்யராஜ்க்கு மட்டும்தான். இதுவரையிலும் தனது நடிப்பை காட்டி மக்களை ரசிக்க வைத்துள்ளார்.
பழகுவதற்கு இனிமையானவராகவும், சாதாரண மனிதராகவும் திகழும் சத்யராஜ் சின்னப்பதாஸ் படத்திற்காக வெளியில் ஷூட்டிங் சென்றுள்ளார். அப்போது இப்படத்தின் கதாநாயகி ராதாவுக்கு ஒரு ஹோட்டலில் அறை எடுத்து கொடுத்துள்ளனர்.
அது போல இவரையும் ஹோட்டலில் தங்க சொன்னதற்கு, தயாரிப்பாளர் இயக்குனர்கள் மற்றும் டெக்னீசியர்கள் அனைவரும் தங்கியிருந்த காட்டேஜ் தான் தங்குவேன் என்று கூறியுள்ளாராம். இதனைக் கேட்டு நீங்கள் ஹோட்டலில் சென்று தங்குங்கள் என்று கூறியுள்ளார்கள்.
ஆனாலும், உங்களுடனே வந்து தங்குகிறேன் எனக்கூறி காட்டேஜில் தங்கினார் என கூறப்படுகிறது. இது குறித்த தகவல் உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால் எளிமையானவராக வாழும் சத்யராஜ் கண்டிப்பாக இதுபோல் செய்திருக்க நிறைய வாய்ப்புண்டு என்பது குறிப்பிடத்தக்கது.