புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
உலக நாயகன் கமலின் மெகா ஹிட் படமான நாயகன் படத்தில் முதலில் இந்த முன்னணி நடிகர் தான் நடிக்கவிருந்தாராம்.!யார் அவர் தெரியுமா?
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமலின் வித்தியாசமான நடிப்பில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நாயகன். இந்தத் திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்டது. இப்படத்திற்காக நடிகர் கமல் ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
மேலும் இப்படத்தில் வரும் வசனம் மற்றும் பாடல்கள் அனைத்தும் இன்று வரை ரசிகர்கள் ரசிக்கும் விதமாக இருந்து வருகிறது. அதிலும் ஒரு பிரபலமான வசனமான நாலு பேருக்கு நல்லது நடந்த எதுவுமே தப்பில்ல என்ற வசனமும், தென்பாண்டி சீமையிலே பாடலுக்கு கமல் கொடுக்கும் ரியாக்ஷனும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும்.
ஆனால் இப்படிப்பட்ட மெகா ஹிட் படத்தில் முதலில் சத்யராஜ் தான் நடிக்கவிருந்தாராம். இப்படத்தின் கதையை முதலில் மணிரத்னம் அவர்கள் நடிகர் சத்யராஜிடம் தான் சொன்னாராம். ஆனால் ஒரு சில காரணங்களால் நாயகன் படத்தில் சத்யராஜ் நடிக்க மறுத்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.