திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. சத்யராஜுடன் இருக்கும் க்யூட் குட்டிபையன் இந்த டாப் ஹீரோவா?? யாருனு தெரிஞ்சா ஷாக்காகிருவீங்க!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமான முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் ஹீரோ மட்டுமின்றி வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போதும் அவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சத்யராஜ் சிறுவனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிறுவயதில் பகத் பாசில்
அந்த சிறுவன் வேறு யாருமல்ல. மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி ஸ்டாராக, டாப் நடிகராக வலம் வரும் பகத் பாசில்தான். அவர் தமிழில் விக்ரம், மாமன்னன் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த ஆவேசம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பகத் பாசில் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் வேட்டையன் படத்திலும் நடித்து வருகிறார்.
சத்யராஜூடன் புகைப்படம்
இந்த நிலையில் பகத் பாசில் நடிகர் சத்யராஜ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த பூவிழி வாசலிலே மற்றும் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ஃபாசில். அவரது மகன்தான் பகத் பாசில். அப்படங்களின் படப்பிடிப்பு சமயத்தில் எடுத்த புகைப்படம்தான் வைரலாகி வருகிறது.