மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை சாயிஷாவுக்கு இப்படியொரு திறமையா? வைரலாகும் கலக்கல் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. முதல் படமே இவருக்கு பெரும் புகழை தேடி தந்தது. அதனை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
மேலும் சாயிஷா நடிகர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த போது இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. பின்னர் இருவரும் அவர்களது காதலை ஒப்புக்கொண்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு மிகவும் கோலாகலமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் சாயிஷா, அவ்வப்போது தான் நடனமாடும் வீடியோக்களை வெளியிடுவார்.
இந்நிலையில் அவர் தற்பொழுது சூர்யா - ஜோதிகா இணைந்து நடித்த காக்க காக்க திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவான ஒன்றா இரண்டா ஆசைகள் என்ற பாடலை பாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.