திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடக்கொடுமையே.! எஸ்.பி.பி மகனுக்கு இப்படியொரு நிலைமையா?? வருத்தத்தில் புலம்பும் எஸ்.பி.பி. சரண்.! ஷாக்கில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன். இவரது மகன் எஸ்.பி சரண். பாடகராக அறிமுகமாகி 25 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. மேலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். சரண் பாடகராக மட்டுமின்றி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.
எஸ்.பி சரண் தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ள சீதா ராமம் படத்தில் இரு பாடல்களை பாடியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அவர், மக்கள் மெலோடி பாடல்களை மட்டும் பல ஆண்டுகளுக்கு நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். ஸ்பீட் பீட் பாடல்களை ரசித்து விட்டு விரைவில் மறந்து விடுகின்றனர்.
நான் அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளேன். ஒரு காலத்தில் எனக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தது. நான் பாடிய பாடல்களை மக்கள் ஆதரித்து செம ஹிட்டானது. ஆனால் அதன் பிறகு எனக்கு சரியாக வாய்ப்புகள் வரவில்லை. அது ஏன் என எனக்கு தெரியவில்லை.
என்னால் பாட முடியாது என நான் எப்போதுமே கூறியது கிடையாது. அழைப்பு வந்தால் உடனே ரெக்கார்டிங்குக்கு வந்து விடுவேன். ஆனாலும் ஏன் எனக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பது கேள்வியாகவே உள்ளது என வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் அவர் தமிழில் படம் ஒன்றை தயாரிக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார்.