திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நள்ளிரவில் ஹோட்டல் அறையில் ஷாருக் கான் செஞ்ச காரியத்தைப் பாருங்க! வைரல் புகைப்படம்..
இந்திய சினிமாவில் பாலிவுட் சினிமாவுக்கு என்று தனி அங்கீகாரம் உள்ளது. பாலிவுட் நட்சத்திரங்கள் உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளனர் அவர்களில் ஒருவர் தான் பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படும் ஷாருக் கான்.
பாசிகர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய ஷாருக் கான் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே, தில் தோ பாகல் ஹே, ரப் நே பனா தி ஜோடி, கல் கோ னாஹோ, போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களின் மூலம் உலகெங்கிலும் தனக்கு ரசிகர்கள் பட்டாலத்தை உருவாக்கி வைத்திருப்பவர்.
தமிழ் சினிமாவிலும் இவர் ஹே ராம் மற்றும் உயிரே போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் நடித்து வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவான பதான் திரைப்படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தீபிகா படுகோன் இந்தப் படத்தில் கதாநாயகி ஆக நடித்திருக்கிறார்.சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல் சர்ச்சையை கிளப்பியது. ஷாருக்கான் தனது ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர். தன் பிறந்தநாள் இவர் மும்பையில் இருந்தால் தன் ரசிகர்களை சந்திக்காமல் இருக்க மாட்டார்.
சமீபத்தில் சாருக்கான் தன்னை சந்திக்க விரும்பிய ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரைக் காண வந்த ரசிகர்களை நள்ளிரவு 2 மணிக்கு தனது ஹோட்டல் அறைக்கு அழைத்து உபசரித்து அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி இருக்கிறார். இதனால் மகிழ்ச்சியில் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஒரு ரசிகர் அதனை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிந்து உங்களுடைய இந்த அன்புக்கு வாழ்த்துக்கள் சார். எங்களை மிகவும் அன்பாக நடத்தினீர்கள். இரவு நேரத்தில் உங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களது அன்பு மறக்க முடியாதது என்று பதிவு செய்துள்ளார்.