ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
"மன்சூர் அலிகான் திரிஷாவை குறித்து விளையாட்டாக பேசிவிட்டார்" ஆதரவு தெரிவித்த சீமான்..
தமிழ் திரைத்துறையில் வில்லன் நடிகராக 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருபவர் மன்சூர் அலிகான். இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இது போன்ற நிலையில் இப்படத்தில் கதாநாயகியான த்ரிஷாவை குறித்து மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியிருந்தார். அவர் பேசியது குறித்து, "அந்தகால படத்தில் நடிகைகளை ரேப் செய்வது போல காட்சிகள் வரும். அதே போல் லியோ படத்தில் எதிர்பார்த்தேன் த்ரிஷாவை கட்டிலில் தள்ளி ரேப் பண்ணலாம் என்று நினைத்தேன் ஆனால் அது நடக்கவில்லை" என்று பேசி இருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பி வந்தது. இதனை அடுத்து த்ரிஷா, மன்சூர் அலிகான் பேசியது குறித்து ட்விட்டரில் ஆதங்கத்துடன் பதிவு வெளியிட்டார். இப்பதிவிற்கு பின்பு திரிசாவிற்கு ஆதரவு அளித்து பல சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் பேசி வந்தனர். மேலும் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்சூர் அலிகானிற்கு ஆதரவு தெரிவித்து பேசி இருப்பது மேலும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. அவர் கூறியதாவது, "மன்சூர் அலிகான் விளையாட்டாக த்ரிஷாவை குறித்து பேசியிருப்பார். இந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் மற்ற பெரிய பிரச்சனைகளை பார்க்கலாம்" என்று கூறி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.