மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விக்ரம் பிரபுவின் டாணாக்காரன்! புகழ்ந்து தள்ளிய விஐபி! யார்? என்ன சொல்லியுள்ளார் பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. அவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாணாக்காரன். இந்த படத்தை ஜெய் திரைப்படத்தில் கொடூர காவல்துறை அதிகாரியாக வந்து அனைவரையும் மிரட்டிய தமிழ் இயக்கியுள்ளார்.
டாணாக்காரன் திரைப்படத்தில் விக்ரம்
பிரபுவுக்கு ஜோடியாக மலையாள நடிகை அஞ்சலி நாயர் நடித்துள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. காவலர்களின் பயிற்சி முகாமில் நடைபெறக்கூடிய உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டாணாக்காரன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் டாணாக்காரன் திரைப்படத்தை பாராட்டி இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், டாணாக்காரன் - சரியானவர்கள் அடையவேண்டிய அதிகாரத்தின் அவசியம் என கூறியுள்ளார். மேலும் அதனுடன் அவர், ஆங்கிலேயர்கள் உருவாக்கி விட்டு சென்ற பழமையான அமைப்பு முறையே காவல்துறை எனும் அரசு கருவி. இந்த திரைப்படத்தில் அரசுகளின் கருவியாக செயல்பட்டுவரும் காவல்துறையில் புரையோடி இருக்கும் ஆதிக்கப் படிநிலைகளை சிறப்பான முறையில் இயக்குனர் தமிழ் டாணாக்காரன் திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் என பல கருத்துக்களை பகிர்ந்து நீண்ட அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
'டாணாக்காரன்' - சரியானவர்கள் அடையவேண்டிய அதிகாரத்தின் அவசியம்!https://t.co/sVXHqzvtYe@iamVikramPrabhu | @directortamil77 | @philoedit | @GhibranOfficial | @madheshmanickam | @prabhu_sr | @rthanga | @LalDirector | @ianjalinair | @Potential_st | #Taanakkaran pic.twitter.com/KWVvRpov8N
— சீமான் (@SeemanOfficial) April 9, 2022