பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
எங்கே தேடுவேன்; ரொம்ப பொறாமையாக இருக்கு.! வேதனையில் இயக்குனர் செல்வராகவன்.! அட.. ஏன்னு பார்த்தீங்களா??
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் செல்வராகவன். அவர் தற்போது சினிமாதுறையில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்கும் தனுஷின் அண்ணன் ஆவார். இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக அவதாரமெடுத்து அண்மையில் வெளிவந்த சாணிக் காயிதம் திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து முதல் முறையாக நடித்திருந்தார்.
மேலும் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்திலும் அவர் முக்கிய ரோலில் நடித்திருந்தார். மேலும் செல்வராகவன் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள பகாசூரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் தனது அனுபவம் குறித்தும், ஏதேனும் கருத்து தெரிவித்தும் பதிவு வெளியிடுவார்.
அவ்வாறு அவர் தற்போது, அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது. எங்கு போய் நட்பை தேடுவேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன் ,😥😥😥 pic.twitter.com/k9MM8vCGSK
— selvaraghavan (@selvaraghavan) March 1, 2023