மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம்பருத்தி சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்.! வைரலாகும் புகைப்படங்களால் ஷாக்கான ரசிகர்கள்!!
தற்காலத்தில் சினிமாக்களை விட மக்களால் பெருமளவில் வரவேற்கபடுவது தொலைக்காட்சி தொடர்களே. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு அடிமையாக உள்ளனர்.
இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் செம்பருத்தி. இத்தொடருக்கு ஏராளமான ரசிகர், ரசிகைகள் உள்ளனர். இந்நிலையில் இத்தொடர் அதிக அளவு டிஆர்பியை பெற்று முன்னணியில் உள்ளது.
மேலும் இத்தொடரில் உமா என்ற காமெடி கலந்த வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜெனிபர். இத்தொடரில் இவர் தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
ஜெனிஃபர் சீரியலில் நடிப்பதற்கு முன்பே சரவணன் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் சீரியல் முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என இருவரும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்ககிடையில் அண்மையில் இருவருக்கும் சென்னையில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.