#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எங்களுடைய இந்த நிலைமைக்கு இவர்தான் காரணம்! செந்தில் கணேஷ் கூறிய அந்த நபர் யார் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சி எத்தனையோ கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. விஜய் டீவியில் தங்களது திறமைகளை காட்டியவர்கள் பலர். ஆனால், வெளியுலகில் பிரபலமானவர்கள் ஒரு சிலரே. அவ்வாறு பிரபலமான ஜோடிகளிலில் ஒன்றுதான் நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி.
கிராமப்புறங்களில் மேடைகளில் பாட்டுபாடிவந்த இவர்கள் இன்று தமிழகத்தின் மிகவும் பிரபலன ஜோடி. அதற்கு காரணம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர்தான். சூப்பர் சிங்கர் சீனியரில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இவர்கள் இருவருக்கும் கிடைத்தது. தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு இன்று தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ளார் செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி ஜோடி.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றிபெற்று முதலிடம் பிடித்த செந்தில் கணேஷ் தனது பாட்டுக்கும், புகழுக்கும் யார் காரணம் என்பதை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நான் சிறுவனாக இருந்தபோது நண்பர்களுடன் சேர்ந்து பாட்டு பாடினேன் அப்போது எனது குரு நாதர் செல்லத் தங்கையா அங்கே வந்தார் (அப்போ என் குருநாதர், பிறகு என் அக்காவின் கணவர்). அவர் கல்லூரி மாணவர். நான் எட்டு வயதுப் பையன்.
நீ நல்லா பாடுற, இப்படியே பாடு, நீ பாடுவற்கு நான் பாட்டு எழுதி தருகிறேன் என்று கூறினார். அன்றுமுதல் அவர் எழுதிக்கொடுத்த பாடல்களை பாடிதான் இன்று இந்த அளவிற்கு வளந்துள்ளதாக செந்தில் கணேஷ் தெரிவித்துள்ளார்.