மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நான் பாக்கியலட்சுமி சீரியல் நடிப்பதற்கு அந்த விஷயம் மட்டும் தான் காரணம்" லைவில் மனம் திறந்த நடிகர் சதிஷ்..
தமிழ் சினிமா துறையில் நட்சத்திர நடிகராகவும், சீரியல் நடிகராகவும் கலக்கி வருபவர் தான் சதீஷ். இவர் ஒரு சில விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும் நடிகர் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய படத்தில் சதீஷ் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சதீஷ் கோபி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த பாக்கியலட்சுமி சீரியலின் கதையின்படி கோபிக்கு 2 மனைவிகள். முதல் மனைவியான பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவியான ராதிகாவுடன் வாழ்ந்து வருகிறார். இவர்கள் மூவருக்கும் நடக்கும் சண்டை சச்சரவுகளை வைத்து தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி எகிறுகிறது.
இது போன்ற நிலையில், கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷை திட்டி சமூக வலைதளங்களில் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் மனமுடைந்து போன சதீஷ் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
ஆனால் மீண்டும் சீரியலில் இணைந்த கோபி, தற்போது இன்ஸ்டாகிராமில் வந்து "நான் இந்த சீரியலில் நடிப்பதற்கு ரசிகர்களாகிய நீங்கள் கொடுக்கும் தன்னம்பிக்கையும், உற்சாகமுமே காரணம்" என்று பேசி இருக்கிறார். இந்த லைவில் சதீஷின் கதாபாத்திரமான கோபியின் நடிப்பை பாராட்டி பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.