#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜே சித்ரா இறந்து ஒரு வருஷம் ஆயிடுச்சு!! ஆனாலும்... பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வெளியிட்ட உறுக்கமான பதிவு!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம், அண்ணன் தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்துவந்த நடிகை சித்ரா கடந்த வருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி தனியார் நடச்சத்திர விடுதி ஒன்றில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். சித்ரா இறந்து நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்தநிலையிலும், சித்ராவின் இந்த தற்கொலை இன்றுவரை அவரது ரசிகர்கள் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்றாகவே உள்ளது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் ஜீவா மனைவியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா தனது இன்ஸ்ட்ராகிராம்மில் சித்ரா குறித்து வீடியோ ஒற்றை பதிவிட்டுள்ளார். அதில், உன்னை இழந்து ஒரு வருடம் ஆகிறது, பார்க்கும் எல்லா இடத்திலும் நீ இருக்கிறாய், உனக்கான வாழ்வை வாழ நீ மீண்டும் பிறக்க வேண்டும். மிஸ் யூ டி என பதிவிட்டுள்ளார்.