பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"வெக்கமா இல்ல., இப்படியா பண்ணுவ? " - சூட்டிங் ஸ்பாட்டில் கொந்தளித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்..! அப்படி என்னதான் நடந்தது?..! இணையத்தில் கசியும் வீடியோ..!!
விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் அவர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலமாக வளர்ந்து, இன்று பாண்டியன் மெஸ் வைத்துள்ளனர்.
அதாவது கதிர் - முல்லை சில சூழ்நிலையால் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் இருந்ததாலும், அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் தேர்வு செய்ய வேண்டிய காரணத்தாலும் பாண்டியன் மெஸ் என்ற உணவகத்தை திறந்துள்ளனர். அண்ணன் மூர்த்தியும் தற்போது வீட்டை விற்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு புறம் அண்ணன் வீட்டை விற்க முயல்வதும், மறுபுறம் கதிர் ஹோட்டல் நடத்துவதும் என சீரியல் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், கதிர் ரோலில் நடித்து வரும் குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவரது ஹோட்டலுக்கு தம்பி கண்ணன் வந்து ஓசியில் சிக்கன் சாப்பிட்டுள்ளார். இதற்கு கதிர், அவன் 8 முழு சிக்கனையும் சாப்பிட்டுவிட்டதாகவும், பணம் கூட கொடுக்கல என்றும் வெக்கமா இல்ல என அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். அதனுடன் நீங்கள் யாரும் தயவுசெய்து தவறாக எண்ணவேண்டாம் என்றும் கேட்டுகொண்டார்.