#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட சூப்பர்.... இரண்டாவது குழந்தை பிறக்கும் நேரத்தில் புதிய பிளானில் ஆல்யா மானசா...! என்னனு பார்த்தீங்களா...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கலக்கியவர் நடிகை ஆல்யா மானசா. ராஜா ராணி தொடரில் இவர் நடித்த செண்பா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சஞ்சீவ். இந்த நிலையில் சீரியலில் கணவன் மனைவியாக நடித்த இருவரும் உண்மையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஐலா என்ற அழகிய மகள் உள்ளார்.
இந்நிலையில் ஆலியா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். அவருக்கு இந்த மாத இறுதியில் குழந்தை பிறக்க உள்ளதால் ராஜா ராணி 2 தொடரிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். மேலும் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடித்துவருகின்றார்.
ஆல்யா மற்றும் சஞ்சீவ் ஜோடி பல சொகுசு கார்களை வைத்துருக்கும் நிலையில் ஒரு காரை தற்போது விற்றுள்ளனர். மேலும் தாங்கள் வைத்திருந்த மற்றொரு காரை சஞ்சீவ் சகோதரருக்கு பரிசாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காரை விற்று விட்டோம், மற்றொறு காரை பரிசாக கொடுத்து விட்டோம். அடுத்த பிளான் என்ன என்று ஒரு காரை பதிவு செய்துள்ளார். எனவே இந்த பதிவின் மூலம் அவர்கள் புதிதாக பெரிய கார் ஒன்றை வாங்கும் பிளானில் இருப்பதாக தெரிகிறது.