53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
பிரசவ வலியில் துடிதுடித்த பிரபல சீரியல் நடிகை.! குழந்தையை கையில் ஏந்திய தருணம்.! நெகிழ வைக்கும் எமோஷனல் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை அனு. அதனை தொடர்ந்து அவர் மெல்ல திறந்தது கதவு என்ற தொடரில் நடித்தார். பின்னர் அவர் சன், விஜய், ஜீ தமிழ் என பல பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் வில்லி மற்றும் குணச்சித்திர ரோலிலும் நடித்துள்ளார்.
நடிகை அனு கடந்த 2017 ஆம் ஆண்டு விக்னேஷ் எனபவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்தும் சீரியல்களில் நடித்துவந்த அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அனு திருமணமாகி 5 வருடம் கழித்து கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் அறிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை அனுவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவர் முதலில் பிரசவ வலியில் துடித்தது முதல் குழந்தை பிறந்தபின் அதனை முதன்முதலாக கையில் வாங்கியது வரை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த எமோஷனல் வீடியோ வைரலாகி பார்வையாளர்களை நெகிழ்ச்சியுடன் கண்கலங்க வைத்துள்ளது.