மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த விஷயமே எங்களுக்கு தெரியாது.. சித்ரா மரணம் குறித்து சித்ராவின் தாயார் பேட்டி..
தங்கள் மகள் சித்ரா ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதே தங்களுக்கு தெரியாது என சித்ராவின் தாய் விஜயா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமான நடிகை சித்ரா சமீபத்தில் தான் தங்கியிருந்த தனியார் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சித்ராவின் தாயார் விஜயா கூறுகையில், தங்கள் மகள் ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததே தங்களுக்கு தெரியாது என தெரிவித்துள்ளனர். மேலும் திருமணத்திற்கு முன்பில் இருந்து சித்ராவுக்கு கடன் சுமை இருந்தது உண்மைதான் எனவும், ஆனால் அதற்காக அவர் தற்கொலை செய்திருப்பார் என்பதை நம்ப முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சித்ராவுடன் ஹேம்நாத் ஹோட்டலில் தங்க காரணம் என்ன என்றும்? ஹேம்நாத் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் சித்ராவின் தாயார் கூறியுள்ளார்.