மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சி.எஸ்.கே தோற்றாலும் இவங்க பேமஸ் ஆயிட்டாங்க!! வைரலாகும் நடிகையின் கியூட் ரியாக்சன்..
ஐபில் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் ஆட்டத்தை பார்க்க சென்றிருந்த சீரியல் நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஐபில் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவரும்நிலையில், ஐபில் போட்டிகளை காண சாதாரண மக்கள் தொடங்கி, சினிமா, சீரியல் நடிகர்கள் நடிகைகள் என பலரும் மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல சீரியல் நடிகை தர்ஷனா சென்னை அணியின் போட்டியை பார்க்க வந்திருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
கடந்த மே 1 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சா அணி விளையாடிய போட்டியை நேரில் கண்டு ரசித்த சீரியல் நடிகை தர்ஷனா கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மிகவும் அழகாக, க்யூட்டாக அவர் கொடுத்த ரியாக்சனை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அவர், சி.எஸ்.கே எனது ஃபேவரெட். கடந்த முறை லக்னோ அணிக்கு எதிரான மேட்ச் பார்த்தேன், அதில் சென்னை அணி தோற்றுவிட்டது. இந்தமுறை பஞ்சாப் அணியுடனான மேட்சை பார்க்க வந்ததாகவும், எனது புகைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ரியாக்சனுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
நடிகை தர்ஷனா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் தொடரில் வசு என்ற காதாபாத்திரத்தில் நடித்து, பின்னர் அந்த தொடரில் இருந்து வெளியேறியவர். தற்போது சன்டிவியின் பூவா தலையா சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.