மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா... மகனின் பிறந்தநாளை வெளிநாட்டில் கோலாகலமாக கொண்டாடியுள்ள நடிகை பரீனா... வைரலாகும் வீடியோ!!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. ஒரே ஒரு கதைக்களத்தை மையமாக கொண்டு நீண்ட நாட்களாக இந்த தொடர் ஓடி வருகிறது. இந்த தொடர் எப்போது முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் சமீபத்தில் சீரியல் குழு இந்த சீரியலுக்கு முடிவே இல்லை என்பதை போல வீடியோ வெளியிட்டிருந்தது.
பாரதி கண்ணம்மா சீரியலை ரசிகர்கள் விரும்பி பார்ப்பதற்கு வில்லி கதாபாத்திரமான வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனாவும் முக்கிய காரணம் என்றே கூறலாம். பரீனாவின் வில்லத்தனமான நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது பரீனா தனது மகனின் முதல் பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக துபாயில் கொண்டாடியுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் வருகின்றனர்.