திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விவாகரத்துக்கு பிறகு என் மகனுக்கு இவர்தான் அப்பா.! தத்து கொடுத்துட்டேன்.. ஷாக் கொடுத்த நடிகை கிருத்திகா!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டிஒலி என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை கிருத்திகா. அதனைத் தொடர்ந்து அவர் பல தொலைக்காட்சி தொடர்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் அவர் நெகட்டிவ் ரோலிலேயே நடித்துள்ளார்.
நடிகை கிருத்திகா சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வந்தார். இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் தனது விவாகரத்து குறித்தும், மகனைக் குறித்தும் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, திருமணம் முடிந்ததிலிருந்தே எங்களுக்குள் பிரச்சினைகள் வந்துகொண்டே இருந்தது. அவற்றை எல்லாம் பேசிதான் சமாளித்து வந்தோம். ஒரு கட்டத்தில் முடியாத அளவிற்கு செல்லவே அனைவரும் பேசி விவாகரத்து முடிவுக்கு வந்தோம்.
அந்த சமயத்தில் எனக்கு இருந்த ஒரே கவலை, வரும் நாட்களில் அப்பாவை பற்றி கேட்டால் எனது மகனின் மனம் கஷ்டப்படும் என்பதுதான். ஆனால் எனது அண்ணன் என் மகனுக்கு அப்பாவாக இருந்து வழிகாட்டுகிறார். அதனால் நமக்கு அப்பா இல்லையே என வருத்தப்படும் அளவிற்கு எதுவும் நடக்க வாய்ப்பில்லை. மேலும் எனது அண்ணனுக்கு என் மகனை தத்து கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
மேலும் எனது அம்மாவிற்கு நான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் நான் அதைபற்றி யோசிக்கவில்லை. எனக்கு உறுதுணையாக எனது மகனும், குடும்பமும் உள்ளது எனக் கூறியுள்ளார்