#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"எனக்கு இன்னொரு திருமணம் செய்துகொள்ள ஆசை!" சீரியல் நடிகை கிருத்திகா பேட்டி.!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை கிருத்திகா அண்ணாமலை. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான "மெட்டி ஒலி" தொடரின் மூலம் பிரபலமானார். இவர் பெரும்பாலும் வில்லி போன்ற திமிர் பிடித்த எதிர்மறை கதாப்பாத்திரத்தில் தான் நடிப்பார்.
மேலும் இவர் "மானாட மயிலாட" நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து இவருக்கு வீட்டில் திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசிய கிருத்திகா " திருமணம் ஆன புதிதில் இருந்தே எங்கள் இருவருக்கும் ஒத்துப் போகவில்லை.
தொடர்ந்து பிரச்சனைகள் வந்துகொண்டே இருந்ததால், வீட்டில் அனைவரும் அமர்ந்து பேசி விவாகரத்து வாங்கி விட்டோம். எனக்கு அப்போதிருந்த ஒரே கவலை, என் மகனிடம் அவனது அப்பா பற்றி யாராவது கேட்டால் அவன் வருத்தப்படுவானோ என்று பயந்தேன்.
ஆனால் என் அண்ணன் இவனுக்கு அப்பாவாக இருந்து வழி நடத்துகிறார். அப்பா இல்லை என்ற கவலை என் மகனுக்கு வராமல் என் அண்ணன் பார்த்துக் கொள்கிறார். நாங்கள் அனைவரும் ஒன்றாகத் தான் இருக்கிறோம். எனக்கு இன்னொரு திருமணம் செய்துகொள்ளும் ஆசை இருக்கிறது" என்று கூறியுள்ளார்.