#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜோதிடர் பேச்சை கேட்டு பெயரை மாற்றிக்கொண்ட நடிகை நீலிமா ராணி..! காரணம் அவரா..? புது பெயர் என்ன தெரியுமா.?
தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நீலிமா ராணி. சிவாஜிகணேசன், கமல் நடிப்பில் வெளியான தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார்.
குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி தொடர் இவரை சின்னத்திரையில் மேலும் பிரபலமாக்கியது. தற்போது விஜய் டிவி, ஜீ தமிழ் என முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் முன்னணி தொடர்களில் நடித்துவருகிறார் நீலிமா ராணி.
விஜய் தொலைக்காட்சியில் அரண்மனை கிளி, ஜீ தமிழில் நிறம் மாறாத பூக்கள் போன்ற தொடர்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகை நீலிமா ராணி ஜோதிடரின் அட்வைஸைக் கேட்டு நீலீமா ராணி என்ற தனது பெயரை நீலிமா இசை என்று மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இசைவாணன் என்பவரை நீலிமா திருமணம் செய்துள்ள நிலையில் தனது பெயரில் இருக்கும் ராணியை தூக்கிவிட்டு கணவனின் பெயரை சேர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது.