மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"உயிருக்கு போராடிட்டு இருக்கும்போது என்னோட அந்த இடத்தில் கை வைத்து அமுக்கினார்கள்" சன் தொலைக்காட்சி சீரியல் நடிகை சந்தியா பரபரப்பு பேட்டி..
"சந்திரலேகா" உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடிப்பவர் நடிகை சந்தியா. இவர் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, இவ்வாறு 2006 ம் வருடம் கும்பகோணத்தில் "செல்லமடி நீ எனக்கு" சீரியல் டைட்டில்பாடல் படமாக்கப்பட்ட போது அங்குள்ள கோயில் யானையுடன் ஷூட் செய்தனர். அது என்னைத் திடீரென்று தாக்கியது. அந்த தாக்குதலில் ஏழுஇடங்களில் எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு சில பாகங்களை அகற்ற நேர்ந்தது.
என்னுடன் வேலை செய்த ஆண்டான்சர்கள் என்னைத் தூக்கிக்கொண்டு ஓடியபோது, ஒருவர் என் மார்பில் கைவைத்து சுயஇன்பம் பெற்றுக் கொண்டிருந்தார். என்னைத் தூக்கிக்கொண்டு ஓடியவர்களில் யார் என் மார்பில் கை வைத்தது என்று எனக்குத் தெரியாது. என் வாழ்கையில் எனக்கு நடந்த துயரமான சம்பவம் என்று இதை தான் சொல்வேன்.
அதன்பிறகு, நான் மாதவிடாய் காலத்தில் அந்த யானை அருகில் சென்றதால், அது என்னைத் தாக்கியதாக ஒரு செய்தி வந்தது. நான் ஹைதராபாத்தில் இருந்தபோது "குற்றம்...நடந்தது என்ன...?" என்ற நிகழ்ச்சியில் என்னைப் பற்றிய இந்த டாபிக்வந்தது. அதில் பல நிபுணர்கள், " நான் அணிந்திருந்த ஆடையின் நிறம் பிடிக்காமலோ,அல்லது வாசனை திரவியம் பிடிக்காமலோ அந்த யானை என்னைத் தாக்கியிருக்கலாம்.." என்றெல்லாம் பேசினார்கள். இவர்கள் வந்து தூக்கிப்பார்த்தார்களா நான் மாதவிடாயில் இருந்ததை..?
படப்பிடிப்பில் அந்த யானை அருகில் வரும்போது நான் காசு கொடுக்க வேண்டும். அப்போது யானை என்னை ஆசீர்வாதம் செய்யும். மறுபடி மறுபடி டேக் எடுக்கும்போது முன்பு கொடுத்த அதே ரூபாயை எடுத்து திரும்பக் கொடுக்க வைத்தார்கள். இவள் நம்மை ஏமாற்றுகிறாள் என்று அந்த கோயில் யானை நினைத்துக் கோபப்பட்டு என்னைத் தாக்கிவிட்டது இதுதான் உண்மை. இதை என்னிடமே கேட்டிருக்கலாம்." என்று அந்த பேட்டியில் நடிகை சந்தியா மனம் வருந்தி கூறியிருந்தார்.