"படவாய்ப்பிற்காக படுக்கையை பகிர்வது நடிகைகளின் விருப்பம்" மனம் திறந்த பிரபல நடிகை



Serial actress openup about adjustment

திருமதி செல்வம், மெட்டி ஒலி போன்ற மெகா தொடர்களில் நடித்து பிரபலமானவர் லதா ராவ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என பல மொழி சீரியல்களிலும் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமாவுக்கும் வந்துள்ளார்.

Kollywood

சீரியலில் நடித்து பிரபலமான லதா ராவ், தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக காமெடி துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து யங் மங் சங், நிமிர்ந்து நில் ஆகிய படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

லதா ராவ் சின்னத்திரையில் தன்னுடன் நடித்த சக நடிகர், ராஜ் கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு லாரா, ராகா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் லதா ராவ், சமீபத்தில் ஒரு பேட்டியளித்திருந்தார்.

Kollywood

அதில் அவர் கூறியதாவது, " மீடியா துறையில் மட்டுமல்ல, எல்லா துறையிலும் அட்ஜஸ்ட்மென்ட் உள்ளது. பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வது அந்தந்த நடிகைகளின் விருப்பம். இதனால் நானும் பல படவாய்ப்புகளை இழந்துள்ளேன். அதுகுறித்து நான் பேச விரும்பவில்லை" என்று லதா ராவ் கூறியுள்ளார்.