மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதிய படத்தில் நடிகையாக அவதாரம் எடுக்கும் சீரியல் நடிகை பிரியங்கா... எந்த படத்தில் தெரியுமா.?
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பமான தொடர் தான் காற்றுக்கென்ன வேலி. இந்த தொடர் கல்லூரி, கலெக்டர் ஆகும் கனவு, காதல், குடும்பம் என எல்லாம் கலந்த கலவையாக சுமார் 809 எபிசோடுகள் ஒளிபரப்பானது.
இந்த தொடரில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரியங்கா. கன்னட நடிகையான இவர் காற்றுக்கென்ன வேலி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா தற்போது புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது கன்னடத்தில் பேட்மேனர் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.